Monday, January 18, 2010

என் கவிதைகள்


நீண்ட நாட்களாக என் வலைப்பதிவில் என் கவிதை எழுத வேண்டும் என ஆசை எழுதி உள்ளேன் நன்றாக இருந்தால் comments செய்யுங்கள் pls


1.இறப்பதில் எனக்கு
உடன்பாடில்லை
ஆனால் கண்டிப்பாக
இன்று இறந்துவிட
வேண்டும்
ஏன் என்றால் நாளை
நான் கண்டிப்பாக உயிரோடு
இருக்கமாட்டேன் எனவே
இன்று நான் இறக்கிறேன்
நாளை உயிரோடு
இருக்ககூடாது
என்பதற்காக,
இறந்ததும் சொல்வேன்
நேற்று இறந்திருக்ககூடாது
என்று ...




2.எதற்கும்
பிரயோஜனமில்லை என
தூக்கிபோட
முற்படுகிறேன்,
ஆனால் என்றாவது
தேவைப்படும் என
எடுத்துவைக்க
எத்தனிக்கிறேன்,
தேவைப்படும்போது
பெற்றுக்கொள்ளலாம் என
நினைக்கிறன்,
இதுபோல்
அதுவராது என
முடிவு செய்கிறேன்,
முடிவில் உங்களிடம் சொல்கிறேன்...
வேண்டாம் இருக்கட்டும் நானே
பார்த்து கொள்கிறேன் என்று,
ஆனால் ,
என்றாவது ஒருநாள் வேண்டாம் என
நான் சொல்வேன்.
அந்நாளில் நீங்களும் அதைதான் சொல்வீர்கள்
ஆனால் அதை நான் கேட்கமாட்டேன்.
நீங்கள் யார் எனக்கு சொல்வதற்கு ?
எனக்கேட்பேன்.