Monday, May 25, 2009

வார்த்தைகள்


மனித இனம் பயன்படுத்தும் சக்திவாய்ந்த மருந்து , வார்த்தைகள்தான் -Rutyard Kipling.
சில தடவை வார்த்தைகள் ஒன்றாக குவிய மறுக்கிறது அது சில பேருக்கு நோயாகவும் சில பேருக்கு இயலாத்தன்மையை கொண்டுவந்துவிடுகிறது. எனக்கும் அப்படிதான்.நிறைய விஷயங்களை நிறைவாக சொல்லவேண்டும் என்பது என் ஆசை.சில நேரங்களில் அது முடிவதில்லை .நேரமின்மை ஒரு முக்கிய காரணமாகிறது. தேர்வுகள் முடிந்துவிட்டன.இனிமேலும் எழுதாமல் இருக்கக்கூடாது என எண்ணித்தான் மீண்டும் எழுதுகிறேன். இப்போது விஷயத்திற்கு வருவோம்.உங்கள் pen drive -களில் வைரஸ் இருந்தால் நீக்க ஒரு இணையத்தளம் பிரபலமான Avira நிறுவனம் கொடுத்து உள்ளது. தள முகவரி www.freeav.com
  • என்னை பற்றியும் ஒருவர் தன் இணையத்தில் குறிப்பிட்டு உள்ளார் அவர் தாமரைச்செல்வி நன்றி தாமரைசெல்வி.
  • இலவச 101 மென்பொருட்கள் தமிழ்நெஞ்சம்
  • இனி தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சசி. comments எழுதுங்கள். Bye...

Sunday, March 15, 2009

இனைய நண்பர்களுக்கு


அன்பு இணைய நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.அனைவரும் நலமா?நலம் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் இருந்தபோது நான் இதுவரை பார்க்காத சில நல்ல இணைய முகவரிகளை கண்டேன் இதற்கு முன்னால் நீங்கள் கண்டு இருந்தால் மன்னிக்கவும்.லினக்ஸ்,மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், கூகிள், லினக்ஸ் மற்றும் சுதந்திர இலவச மென்பொருட்கள் (Free and open source software (FOSS) பற்றி அறிய இதோ பெயரும் வித்தியாசமாக உள்ளது சுதந்திர இலவசமென்பொருட்கள்...

தினமும் ஒரு மென்பொருள் பெற அருமையான தளம் டூல்பாருடன்,டூல்பாரும் சூப்பர் Tamilwares . ஆன்லைன் தமிழ் அகராதிக்கு கிட்டத்தட்ட 17188 தமிழ் வார்த்தைகள் உள்ளன இதோ .மென்பொருள் பெற மீண்டும் ஒரு தளம் Ask Anything. தமிழ் புத்தகங்கள் தொகுப்புகள்,ஒலிதொகுப்புகள் உள்ளது எழுதுபவர் மாறன் இந்த வாரம் அவ்வளவுதான் என்னால் முடிந்தது அடுத்த வாரம் பார்க்கலாம் ok Bye......

Sunday, March 1, 2009

ஆஸ்கார் விருது



ஒரு இந்தியன் ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் சந்தோசம்.நீண்ட நாள் கனவு நிறைவேறியது என்னவோ உண்மைதான் ஆனால் எனக்கு அந்த விருது பெற்றதில் உடன்பாடு இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் நல்ல திறமைசாலி அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் சென்று வாசித்த இடம் என்னவோ அயல்நாட்டு படத்தில் அதுவும் இந்தியாவின் சில பகுதிகளை படுமட்டமாக காட்டிய படத்தில்.ஏன் Dany Boyal இருக்கும் ஊரில் அதுபோன்ற மட்டமான இடமே இல்லையா?இருக்கும் இருந்தும் ஏன் எடுக்கவில்லை ஏன் என்றால் ஆஸ்கார் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அதெல்லாம் பிடிக்காது. போட்டியிட்ட மற்ற படங்கள் அனைத்தும் பிரமாதம் என SRAMAKRISHNAN கூறி இருக்கிறார்.சரி எப்படியோ ஒன்றுக்கு மூன்று விருது பெற்றுவிட்டோம்(ரசூல் பூக்குட்டி) சேர்த்து. வடிவேலன்.ஆர் நாளுக்கு நாள் பட்டை கிளப்புகிறார்.
                     

Monday, February 9, 2009

நன்றி





எல்லாரும் நான் கடவுளை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள் .சிறியவன் நான் பேசுவது தவறு.என்னை பொறுத்தவரை பிரமாதம்.படத்தில் இசை-முதல் ,இயக்கம்-2வது,ஒளிப்பதிவு-3வது மற்றவர்கள் எல்லாம் இதற்கு பிறகே. ஆறாம் திணை  மிக அருமையாக உள்ளது.
                            நீங்கள் எப்போதாவது பங்கீடு கணினியில் வேலை செய்தால் தயவு செய்து logout செய்துவிடுங்கள். தற்போது அதுதான் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. எத்தனை மென்பொருட்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாகேஷ் அவர்களுக்கு அஞ்சலி செய்த திரு.கார்த்திகை பாண்டியன் மற்றும் Ram.cm அவர்களுக்கும் நன்றி. pkp அவர்கள் DVD குறித்த கேள்விகளுக்கு அருமையாக பதில் அளித்து உள்ளார் with download இதோ . இணையம் பற்றி எதாவது சந்தேகம் எனில் நீங்கள் அணுக வேண்டியது இதோ நமக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் கேட்டால் போதும்.

Sunday, February 1, 2009

நகைச்சுவை அரசர்



அன்பு நண்பர்களே நாங்கள் அனைவரும் சுற்றுலா சென்று இருந்தலால் சிறிது கால தாமதம் .இந்த நான்கு நாட்களில் pkp-யும்,வடிவேலன் அவர்களும் நிறைய எழுதி விட்டார்கள்.அனைத்தும் முக்கியமானவை. KRICONS தன் பங்குக்கு வெளுத்து வாங்குகிறார். இனிமையாக உள்ளது. எனக்கும் பாடலையும் இசையையும் தனித்தனியாக பிரிக்கும் மென்பொருள் வேண்டும் இணைய நண்பர்கள் யாராவது உதவி செய்தால் உபயோகமாக இருக்கும்.(இலவசமாக)
                                      கணினி பற்றி தெரிந்து கொள்ள மற்றும் ஒரு புதிய தளம் இதோ http://tamil-kanini.blogspot.com . மறைந்த நகைச்சுவை நடிகர் மதிற்பிற்குரிய திரு.நாகேஷ் அவர்களுக்குஅனைவரின் சார்பில் எங்களின் கண்ணீர் அஞ்சலி. 

Saturday, January 24, 2009

ஏதோ ஒரு ஓரத்தில் ...




உலகின் ஏதோ ஒரு ஓரத்தில் நடக்கும் பல விஷயங்கள் நமக்கு இது நாள் வரை தெரியாமல் இருந்து வந்தன. இணையம் என்று ஒன்று வந்த பிறகு நமக்கு பல முக்கிய விஷயங்கள் தெரிய வருகின்றன. இணையத்தில் பல பேர் blog எழுதுகிறார்கள் நமக்கு தான் தெரியவில்லை அவர்கள் நம்மை விட அதிகமாக எழுதும் போதுதான் நமக்கு அவர்களை தாண்டும் ஆசை வருகிறது. நான் இது வரை எழுதிய அனைத்தும் எங்கோ இருந்து பார்த்து ரசித்த விஷயம் தான். ஒப்புகொள்வதில் தவறில்லை .   சில கொடுமைகளையும் பல நல்ல விஷயங்களையும் நான் கண்ட வலைபூ தேன்தமிழ்  பார்த்து மிரண்டு போனேன்.

                                  இசையால் உயிரை உருவி எடுக்கும் வித்தை தெரிந்த ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா மட்டுமே சமீபத்தில் வெளிவந்த நந்தலாலாவும் , நான் கடவுளும் அதற்கு உதாரணம் கேட்டு பாருங்கள். உங்களுக்கு தன்னால் புரியும் . சரி கடைசியாக அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் ... குமுதம் வார இதழில் இடம் பிடித்த திரு.பிகேபி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .கோல்டன் குளோப் விருது பெற்ற திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு நல்வாழ்த்துகள். புதிய வைரஸ் ஆன Downadub என்ற வைரஸ் அழிக்க சென்னையை சேர்ந்த k7  என்ற மென்பொருள் நிறுவனம் இலவச மென்பொருளை கொடுத்து உள்ளது. அதற்கான நேரடி Link இதோ 

Friday, January 16, 2009

வைரஸ்கள்




இப்போதெல்லாம் கணினிகளில் வைரஸ் தொல்லைகள் தாங்க முடியவில்லை. நமது கணினி முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறது . எத்தனை புதிய ஆண்டி-வைரஸ் வந்தாலும் புதிய வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும் . தற்சமயம் இலவசமாக இருக்கும் ஆண்டி -வைரஸ்கள்   download avast home edition  http://www.avast.com/eng/down_cleaner.html , அல்லது pkp வலை தளத்திற்கு செல்லவும் . இதை பற்றி தனியே blog எழுதி இருக்கிறார் . இதோ http://pkp.blogspot.com/2008/10/blog-post_08.html  , kaspersky anti-virus 2009 முயற்சித்து பாருங்களேன். ஒரு மாத இலவச பதிப்பை பயன்படுத்தி பாருங்கள். எனது கணிணியில் இருந்த worm முதலான அனைத்து வைரஸ்களையும் நீக்கிவிட்டது. ஒரு மாத இலவச பதிப்பாக இருந்தாலும் முழுமையான பதிப்பாக உள்ளது. இலவசங்களில் நிறைய எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் kaspersky anti-virus 2009 trial edition உபயோகிக்கும் ஒரு மாதத்தில் வேறு நல்ல வழியும் தென்படலாம்.

http://www.kaspersky.com/trials

1. kaspersky install செய்யும் முன் வேறு எதாவது ஆண்டி -வைரஸ் இருந்தால் முழுமையாக uninstall செய்துவிடவும்.( eg:) http://www.avg.com/download-tools ல் AVG Remover(32bit) உதவும்.

2. Internet explorer உங்களது default browser ஆக இருத்தல் வேண்டும்.

3. windows defender போன்ற மென்பொருள்களை நீக்கி விடவும்.

kaspersky நன்றாக வேலைசெய்கிறது.

உபயம் (இராமநாதன்)...  கவிதை ஆசிரியர் திரு.அறிவுமதியின் வலைப்பூ இதோ www.arivumathi.blogspot.com அருமையாக உள்ளது